“5 ஆண்டுகள் என்ன கிழிச்சீங்க! இப்போ டூத் பேஸ்ட் விளம்பரம் போல வந்து பல்லைக் காட்றீங்க”; அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்! வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Apr 03, 2019 09:52 PM

 

women criticises asked a question to central minister in KA goes viral

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கும், வரும் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு வடக்குப் பகுதியில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சதானந்த கவுடாவிற்கு ஆதரவாக அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஹெப்பால் என்ற இடத்தில் ஓட்டு கேட்டு வீடு வீடாக சென்ற பாஜகவினர், அங்கிருந்த பெண் ஒருவரிடம் சதானந்த கவுடாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர், கடந்த 5 ஆண்டுகளில் சதானந்த கவுடா எங்கள் தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்டுள்ளார்.

வீடியோ காண:https://twitter.com/MSR_Tweets/status/1113119913336381440

மேலும், பெப்சோடண்ட் பேஸ்ட் விளம்பரம் போல பல்லை மட்டும் பளபளவென காண்பிக்கிறார். அதைத் தவிர வேறு ஏதேனும் செய்தாரா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாஜகவினர் சமாளித்து விட்டு சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.