தேர்தல் செலவுக்காக ஆதார் அட்டையை அடமானம் வைத்து வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்! விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Apr 02, 2019 08:13 PM

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவுக்கு போதிய பணம் இல்லாமல் ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானமாக வைத்துக்கொண்டு கடன் தருமாறு வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அகிம்ஸா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ். இவர் தன் தேர்தல் செலவுக்கு தேவையான அளவு பணம் இல்லாமல் தன் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அடமானம் வைத்துக்கொண்டு ரூ.50 லட்சம் கடன் வழங்குமாறு ஸ்டேட் வங்கியில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக இவர் காந்தி வேடம் போட்டுக்கொண்டு நாமக்கல் ஸ்டேட் வங்கி கிளைக்குச் சென்று கடன் பிரிவு மேலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. வங்கியில் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருக்கிறேன் மேலும், தன் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
