BGM Shortfilms 2019

'இதுதான் உள்ளங்கையில வச்சு தாங்குறதா'... புதுமண தம்பதியின் 'க்யூட் ரொமான்ஸ்'... வைரலாகும் வீடியோ !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 14, 2019 03:08 PM

கேரளாவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மனைவியின் கால் வெள்ளத்தில் படாதவாறு மணமகன் தூக்கி சென்ற வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

Groom lifted his newly married wife in kerala Flood

கடவுளின் தேசமான கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அந்த மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ள காடாக மாற்றியுள்ளது. குறிப்பாக கண்ணூர், வயநாடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

இதனிடையே கனமழைக்கு நடுவிலும் கண்ணூரில் நடைபெற்ற திருமணம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கண்ணூர் அருகே சிரக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்திருந்தார்கள். ஆனால் கண்ணூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மணமகள் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டிலேயே திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து மணமகள் வீட்டில் எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் மணமகன் ராஜேஷ், மணமகள் திவ்யாவிற்கு தாலி கட்டினார். இதனைத்தொடர்ந்து மணமகன் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் வீட்டிற்கு வெளியே வந்தார்கள். அப்போது மணமகள் திவ்யாவுக்கு தண்ணீரில் கால் வைக்க தயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மணமகன் ராஜேஷ் மணமகளை அழகாக தூக்கி கொண்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #KERALA #KERALAFLOOD #COUPLE #GROOM