‘அரை நிர்வாணமாக பேட்டிங்’.. புது போட்டோவை வெளியிட்ட சாரா டெய்லர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 28, 2019 07:57 PM

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் அரை நிர்வாணத்தில் பேட்டிங் செய்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sarah Taylor shares half nude picture goes viral on Social media

சாரா டெய்லர் கடந்த 2006 -ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானவர். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 126 ஒருநாள் போட்டி, 90 டி20 போட்டி மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார்.

சில பிரச்சனைகள் காரணமாக சமீப காலங்களில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து வெளிவருவது குறித்து விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு சாரா டெய்லர் நிர்வாணமாக கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அரை நிர்வாணமாக பேட்டிங் செய்வது போன்ற மற்றொரு புகைப்படத்தை சாரா டெய்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் பேட் உடன் நிற்கும் சாரா டெய்லரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Waiting to go into bat like ... • @womenshealthuk • #thenakedissue #womenshealthmag #portrait

A post shared by Sarah Taylor (@sjtaylor30) on

Tags : #CRICKET #SARAHTAYLOR #NUDE #PICTURE #VIRALPHOTO #ENGLAND