இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 25, 2019 09:52 PM

இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்திருந்த இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து ட்வீட் செய்து வருகின்றனர்.

Michael Vaughan got trolled for mocking at Indian team

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது இந்த இரண்டு அணிகளுக்குமே தொடர்பில்லாத இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ட்விட்டரில் இந்திய அணியைக் கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்தார். அந்தப் பதிவில், “92 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட். 100 ரன்களுக்கு குறைவாக இப்போதுகூட ஒரு அணி ஆல் அவுட் ஆகும் என நம்ப முடியவில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடி வரும் இங்கிலாந்து 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய ரசிகர்கள் மைக்கேல் வாகனின் இந்தியா பற்றிய ட்வீட்டுக்கு தற்போது பதில் ட்வீட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #ENGLAND #IRELAND #MICHAELVAUGHAN