"ரோட் 'சைடு'ல சூட்கேஸ் ஒன்னு கெடந்துச்சு"... 'போலீஸ்' வந்து 'ஓப்பன்' பண்ணி பாத்ததுல,,.. உடம்பு ஃபுல்லா காயத்தோட,,... பீதியில் உறைந்த பொது மக்கள்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று காலை கிடந்த சூட்கேஸ் ஒன்றினுள் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சாகியாபாத் பகுதியின் சாலையோரம் சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் கிடந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேஸை சோதனை செய்தனர். அப்போது, அதில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர்.
அந்த பெண்ணின் வயது சுமார் 25 முதல் 30 க்குள் இருக்கும் என கருதப்படுகிறது. தொடர்ந்து போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றதாகவும் போலீசார் கருதுகின்றனர்.
அந்த பெண் யார் என்பது குறித்து சரியான தகவல் எதுவும் தெரிய வராத நிலையில், பெண்ணை அடையாளம் காணுவது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில், பெண்ணின் மரணத்திற்கு பின்னர் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
