'நம்பி வந்த பெண்ணிற்கு துரோகம்...' 'பாலியல் சந்தையில் விலை பேசி விற்ற காதலன்...' - அழுது துடித்த காதலி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 27, 2020 03:37 PM

திருமணம் செய்வதாக கூறி 20 வயது இளம்பெண்ணை அகமதாபாத்தில் உள்ள பாலியல் சந்தையில் விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

assam 20 yr old girl sold sex market in ahmadabad her lover

அசாம் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், தெலுங்கானா ஹைதராபாத்தில் இருக்கும் தன் சகோதரி வீட்டிற்கு திருமண நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சோனு என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்த சோனு என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வீட்டிலிருந்து ஓடி வர செய்துள்ளார்.

இருவரும் அகமதாபாத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் பின்னர் காதலியை பாலியல் வன்கொடுமை செய்து அப்பகுதியில் செயல்படும் பாலியல் சந்தையில் காதலியை விற்றுள்ளார். பாலியல் கும்பலிடமிருந்து தப்பிக்க முடியாத அந்த பெண் பல மாத காலம் ஒவ்வொரு இடங்களுக்கு மாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

20 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண், கோக்ரா வட்டாரத்தில் உள்ள பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வியாழன் கிழமை, தப்பிக்க முயற்சி செய்த அந்த பெண் 100க்கு போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதையடுத்து செல்போன் சிக்னல் வைத்து பாதிக்கப்பட்ட பெண் வத்வா ஜி.ஐ.டி.சி காவல்துறையின் கட்டுப்பாட்டு கீழ் வருவதாக கண்டறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பெண்ணை மீட்டனர்.

 

மேலும் அந்தப் பெண்ணுடன் உரையாடியபோது, ​​இந்தி சரளமாக இல்லாததால் போலீசார் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.  தற்போது பாதிக்கபட்ட பெண் பெற்றோர்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் மனநல ஆலோசனை வழங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 366 (கடத்தல், பெண்ணை தனது திருமணத்தை கட்டாயப்படுத்த தூண்டுதல்) மற்றும் 365 (இரகசியமாகவும் தவறாகவும் நபரை அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #CRIME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Assam 20 yr old girl sold sex market in ahmadabad her lover | India News.