"டேய், சீக்கிரம் சாப்பிட வா, நேரமாகுது பாரு"... 'தாய் சாப்பிட அழைத்ததால் கடுப்பான 'மகன்'... மறுகணமே கேட்ட 'துப்பாக்கி' சத்தம்... பதறிப் போன குடும்பத்தினர்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் இரவு உணவு உண்ண தாய் திரும்ப திரும்ப அழைத்த நிலையில், அவரை சொந்த மகனே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாட்னா அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் மஞ்சு தேவி (55). இவரது மகன் அங்கட் யாதவ். சில தினங்களுக்கு முன் இரவு சுமார் 10:30 மணியளவில் யாதவ் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரவு வெகு நேரமாகியும் சாப்பிட வராத நிலையில், தாய் மஞ்சு தேவி தொடர்ந்து அவரை உணவு உண்ண அழைத்துள்ளார்.
ஆனால், யாதவ் உடனடியாக வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. இதனால், வீட்டு வாசலுக்கு வந்து மஞ்சு தேவி, யாதவை தொடர்ந்து அழைத்துள்ளார். இதனால் கோபமடைந்த யாதவ், நேராக வீட்டு வாசலுக்கு வந்து தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாயின் தலையில் சுட்டுள்ளான். இதில், சம்பவ இடத்திலேயே மஞ்சு தேவி சரிந்து விழுந்தார். இதனை நேரில் கண்ட மஞ்சு தேவியின் உறவினர் ஒருவர், பதறிப் போயுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர், மஞ்சு தேவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மிகவும் கடினமான சூழ்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து போயுள்ளார். முன்னதாக, தாயை கொன்றதன் பெயரில் இளைஞர் யாதவை போலீசார் தேடி வந்த நிலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாரை இளைஞர் யாதவ் சுட முயன்றதாகவும் தெரிகிறது. தொடர்ந்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். ஆறு மாதங்களுக்கு அவரது நண்பர் ஒருவரின் உதவியுடன் 7000 ரூபாய்க்கு அதனை வாங்கியுள்ளார். மேலும், இவர் தகாத நட்பின் காரணமாக சில தவறான செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
