பெற்றோரை எதிர்த்து 'காதல்' திருமணம்... 5 மாத 'கர்ப்பிணி' பெண்... தூக்கிட்டு தற்கொலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 08, 2020 12:09 AM
5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
![5 months pregnant women suicide in Puducherry, Police Investigate 5 months pregnant women suicide in Puducherry, Police Investigate](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/5-months-pregnant-women-suicide-in-puducherry-police-investigate.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ(23) என்பவருக்கும், புதுவை பகுதியை சேர்ந்த அருண்ராஜ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரது வீட்டிலும் சமாதானம் அடைந்து இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயஸ்ரீக்கு வளைகாப்பு விழா நடந்தது. இதில் ஜெயஸ்ரீக்கு தங்க வளையல் போடவில்லை என்று, அருண்ராஜ் குடும்பத்தார் தகராறு செய்துள்ளனர். இதில் அருண்ராஜை, ஜெயஸ்ரீ சகோதரர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இரு குடும்பத்தாரையும் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஜெயஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயஸ்ரீ சகோதரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அலறியடித்து ஓடிவந்து ஜெயஸ்ரீ பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு கதறியழுதனர். மேலும் ஜெயஸ்ரீ சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
5 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)