'கடைசி' நேரத்தில் வந்த மர்ம போன்... கல்யாணத்தை 'நிறுத்திய' சென்னைப்பெண்... பதறிப்போன மாப்பிள்ளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 08, 2020 11:10 PM

கடைசி நேரத்தில் வந்த மர்ம போனால், கல்யாணத்தை மணப்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Chennai Woman Stopped her Lover Marriage, details inside

குலசேகரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் குமரியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று(ஜனவரி 8) குலசேகரத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கல்யாணப்பெண்ணுக்கு கடைசி நேரத்தில் வந்த போன் காலால் அந்த திருமணம் நின்றுபோனது.

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாப்பிள்ளை சென்னையில் வேலை பார்க்கும்போது தன்னை காதலித்து ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு, தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக மணப்பெண்ணிடம் புகார் அளித்தார். மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் மணப்பெண்ணின் வாட்ஸ் ஆப் நம்பருக்கு அனுப்பி வைத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் கதறியழ மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை நடத்தினர். முதலில் மவுனம் சாதித்த மணமகன் வீட்டார், பின்னர் புகைப்படங்களை காட்டி கேட்டதும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மணமகள் வீட்டார் வரதட்சணை பணமாக அளித்த 5 லட்சம் பணத்தை மணமகள் வீட்டார் திருப்பி கேட்டனர். மேலும் மணப்பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

குலசேகரம் போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். தங்களால் முழுப்பணத்தையும் அளிக்க முடியாது என்பதால் முதலில் ரூபாய் 2 லட்சம் பணத்தை கொடுப்பதாகவும், 15 நாட்களுக்குள் மேலும் 3 லட்ச ரூபாய் பணத்தை அளிப்பதாகவும் மணமகன் வீட்டார் உறுதி அளித்தனர்.

இரண்டு வீட்டினருக்கும் மத்தியில் உடன்பாடு ஏற்பட்டதால், போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : #POLICE