விடிஞ்சா கல்யாணம்.. நைட்டு மணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. உறைந்துபோன குடும்பத்தினர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Dec 12, 2022 10:33 PM

ஆந்திர மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்தினம் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Andhra Groom Took Sad decision Before Marriage Day

தெலுங்கானா மாநிலம் நிஜாம் பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் பிரபாகர். இவருடைய மகள் ரவளி. இவருக்கும் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன. நவிபேட் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது திருமணம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற இருந்தது.

இந்நிலையில், திருமணத்திற்கு முன்தினம் ரவளி மற்றும் சந்தோஷ் போனில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் மணப்பெண் ரவளியின் அறைக்கு எதேச்சையாக உறவினர்கள் செல்லும்போது, அறை பூட்டியிருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் ரவளி தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது.

Andhra Groom Took Sad decision Before Marriage Day

இதனால் திருமண வீடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதனையடுத்து. இதுகுறித்து நிஜாம் பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரவளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து., இது குறித்து கல்யாண மாப்பிள்ளை சந்தோஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது, தனக்கும் ரவளிக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே சிறு விரிசல் கூட ஏற்பட்டதில்லை எனவும் சந்தோஷ் கூறியதாக சொல்லப்படுகிறது.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில், மணப்பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Tags : #MARRIAGE #TELANGANA #GROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Andhra Groom Took Sad decision Before Marriage Day | India News.