"சில பாட்டு இப்டி நம்மள VIBE ஆக்கும்".. பிரதீப் குமார் பாட்டை கேட்டு மெய்மறந்து பாடிய காவலர்.. அவரோட ரியாக்ஷன் தான் இப்ப TRENDING!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவ்வப்போது சோஷியல் மீடியாவில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

செய்திகள் ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு நாளும் ஏராளமான விஷயங்கள் வைரல் ஆவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
வெறுமென வழக்கமான விஷயங்களாக இருக்காமல், சற்று வித்தியாசமாக அல்லது மனதை கவரக் கூடிய வகையில் அவை இருக்கும் போது நிச்சயம் அது தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் அதிகம் வைரல் ஆகி, பார்ப்போர் பலரையும் ஒருவிதத்தில் இணைய வைக்கும்.
அதிலும் குறிப்பாக, சிலரது பாடல் வீடியோவும் கூட பெரிய அளவில் கவனம் பெற்று ஒருவித Vibe மோடுக்கே நம்மைக் கொண்டு செல்லும். இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் பட்டையை கிளப்பி வருவதுடன் பலரையும் மனம் உருக வைத்தும் வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் குமார்.
இவரது குரலுக்கென்றே பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. ஆசை ஓர் புல்வெளி, மோகத்திரை, நீ கவிதைகளா, தலை கோதும் இளங்காத்து உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ள பிரதீப் குமார், இசை அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இதனிடையே, ஒரு இசை நிகழ்ச்சியில் காவலர் ஒருவர் பணியில் இருக்க, அங்கே பிரதீப் குமாரின் தலை கோதும் இளங்காத்து பாடல் ஒலிக்கிறது. இதனைக் கேட்டதும் அப்படியே மெய்மறந்து போகும் அந்த காவலர், பாட்டுடன் சேர்ந்து மிகவும் அசத்தலாக மனம் மறந்து பாடுகிறார் அந்த காவலர்.
பாட்டு வரிகளுக்கு ஏற்ப, தனது முக பாவனைகளை மாற்றி அழகாக தலையசைத்து காவலர் பாடுவது தொடர்பான வீடியோ, தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் வலம் வருவதுடன் பலரையும் மனம் குளிர வைத்து வருகிறது. மேலும் இந்த நாளை பாசிட்டிவ் Vibe ஆக இந்த வீடியோ மாற்றி இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "அந்த மேட்ச்-க்கு பிறகு.. பாகிஸ்தான்ல ஒரு கடைக்கு போனா கூட...".. முகமது ரிஸ்வான் சொன்ன உருக்கமான தகவல்!!

மற்ற செய்திகள்
