இனி வாடிக்கையாளர்கள் ரூபாய் '50 ஆயிரம்' தான் எடுக்க முடியும்... ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்த 'பிரபல' வங்கி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 05, 2020 11:49 PM

தனியார் வங்கியான எஸ் பேங்க், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

RBI sets Rs 50,000 withdrawal limit on Yes Bank, Details

வாராக்கடன் அதிகரித்ததால் எஸ் பேங்க் தொடர்ந்து நிதிச்சிக்கலில் தவித்து வந்தது. இதையடுத்து எஸ் பேங்க் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் பேங்கை நிர்வாகம் செய்திட எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுவலர் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் எஸ் பேங்க் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் தற்போது அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு 50,000-க்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் தெரிவித்து அவரது அனுமதியுடன் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் யாரும் அச்சப்படத்தேவையில்லை. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வருகிறது,'' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags : #RBI #MONEY