‘சிறுவனைப் பாராட்டுகிறேன் என எம்.எல்.ஏ செய்த காரியம்..’ வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 30, 2019 08:22 PM

தெலுங்கானாவில் துணை சபாநாயகர் சிறுவன் வாயில் பணக்கட்டைத் திணிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Telangana deputy speaker stuffs wad of notes into childs mouth

தெலுங்கானாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவர் சிறப்பாக ட்ரம்ஸ் வாசித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலுங்கானா துணை சபாநாயகர் பத்ம ராவ் கௌடா அதைப் பார்த்து பிரம்மித்துப் போய் அந்த சிறுவனுக்கு பணத்தை பரிசாகக் கொடுத்துள்ளார். ஆனால் அதைக் கையில் கொடுக்காமல் வாசித்துக் கொண்டிருந்த சிறுவனுடைய வாயில் வைத்துத் திணித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த ரேவதி தேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “குழந்தைகளை மரியாதையாக நடத்துவது எப்படி என்பதை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பரிசு கொடுப்பதாக இருந்தால் அந்த சிறுவனின் கையில் மரியாதையாகக் கொடுத்திருக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை” எனக் கூறியுள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள பத்ம ராவ் கௌடா, “கலைஞர்களுக்கு பரிசாக பணத்தை வாயில் திணிப்பது என்பது இங்கு பல காலமாக இருந்து வரும் நடைமுறை. அந்த சிறுவனின் திறமையைப் பாராட்டியே நான் அதை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

Tags : #TELANGANA #MLA #DEPUTYSPEAKER