'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 14, 2019 11:24 AM

விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட திமுக எம்.எல்.ஏ ராதாமணி இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

K Radhamani, DMK MLA of Vikravandi is dead During Cancer Treatment

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்த  ராதாமணி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மட்டுமன்றி மத்திய விழுப்புரம் மாவட்டத்தின் திமுக அவைத்தலைவராக பதவியாற்றிய இவர் புற்றுநோய்க் காரணமாக சில காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது.

67 வயதான ராதாமணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும், இவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கல்லூரி கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #DMK #MLA #SAD