'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல'...'LINKEDIN'ல் வந்த அறிவிப்பு'... 'அதிர்ந்து போன கூகுள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 30, 2019 07:50 PM

லிங்டுஇன் வலைத்தளத்தில் வெளிவந்த அறிவிப்பு தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது.

LinkedIn users were surprised to see Google\'s CEO Job

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்டுஇன் வலைதளத்தில், வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள் அதிகமாக பகிரப்படும்.  பெரும் நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை பலரும் இந்த தளத்தை வேலைவாய்ப்பிற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த தளத்தை வேலைவாய்ப்பிற்காக அதிகமானோர் பயன்படுத்துவதால், பல போலியான நிறுவனங்கள் பொய்யான தகவலை வெளியிடுவதாக குற்றசாட்டு நிலவி வந்தது.

இந்நிலையில் அந்த குற்றச்சாட்டினை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. இவரது வேலைக்கான பணியிடம் காலியாக உள்ளது என லிங்டுஇன் வலைதளத்தில் அறிவிப்பு வெளிவந்தது. இதனை கண்ட பலரும் உடனே அந்த பதவிக்கு விண்ணப்பித்தார்கள். இந்த விவகாரம் பெரிதாகி பரபரப்பை கிளப்ப, அந்த அறிவிப்பு போலியானது என தெரியவந்தது. நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் போலியாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மிட்செல் ரிஜெண்டர்ஸ் என்ற அந்த நபர் லிங்டுஇன் வலைதளத்தில் பல பேர் போலியான தகவலை பதிவிடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த செயலை செய்துள்ளார். இதனிடையே இந்த பிரச்னை தொடர்பாக லிங்டுஇன் நிறுவனம் கூறுகையில், ''இதுப் போன்ற போலியான தகவல் எங்கள் கவனத்திற்கு வந்த உடன் அதை நாங்கள் நீக்கி விட்டோம். இது போன்ற மோசடியான பதிவுகள் எங்கள் சேவை விதிமுறைகளை மீறுவது'' என கூறியுள்ளது.

Tags : #GOOGLE #SUNDAR PICHAI #CEO #LINKEDIN