'அடேய்'!... 'என்ன பண்ணி வச்சிருக்க'... நடு ரோட்டுல ஆண் எஸ்ஐ'யிடம்'... பகீர் கிளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 29, 2019 04:18 PM

உற்சாக மிகுதியில் இளைஞர் ஒருவர், ஆண் 'எஸ்.ஐ'க்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young Man Kisses Sub Inspector In Bonalu Celebrations video goes viral

ட்வின் சிட்டி என்று அழைக்கப்படும் ஹைதராபாத், செகந்தராபாத் மற்றும் தெலுங்கானாவின் பிறபகுதிகளில் போனலு என்னும் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். போனலு என்ற தேவி மஹாகாளி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும். வருடந்தோறும் ஜூலை மாதத்தின் பின்னிரண்டு வாரங்களில் வழக்கமாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான திருவிழா கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.

போனலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் ஆகியவற்றை செய்து மஹாகாளி அம்மனுக்கு படைப்பார்கள். இரவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் ஆண்கள் ஆடி பாடி தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அது போன்று இளைஞர் ஒருவர் தனது உற்சாக மிகுதியால் செய்த செயல் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

ஹைதராபாத் பகுதியில் இளைஞர்கள் கூட்டம் ஆடி பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், அந்த பகுதியினை கடந்து சென்றார். அந்த நேரத்தில் அங்கு ஆடி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென ஆண் காவலரின் கன்னத்தில் முத்தமிட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத அவர், பளார் என அந்த இளைஞரின் கன்னத்தில் அறை விட்டார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து விட, அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இளைஞரின் அநாகரிகமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #TELANGANA #POLICE #NALLAKUNTA #SUB INSPECTOR #BONALU CELEBRATIONS