‘தேர்தல் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு!.. ‘எம்.எல்.ஏ உட்பட 6 பேர் பலி’!.. பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 21, 2019 06:41 PM

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் பலியாகியுள்ளனர்.

Gun shot in arunachal pradesh killed 6 members including sitting MLA

அருணாச்சல பிரதேசத்தின் டிரப் மாவட்டத்திலுள்ள போகாப்பானி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தேசிய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரோங் அபோக் ((Tirong Aboh)) உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக மேகாலயா மாநில முதலமைச்சரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான சங்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘எம்.எல்.ஏ திராங் அபோஹ் இறந்த செய்தி கேட்டு தேசிய மக்கள் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வேட்பாளரும், நடப்பு எம்.எல்.ஏவுமான அபோஹ் கொல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு நாகாலாந்து தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

 

Tags : #ARUNACHAL PRADESH #GUNSHOT #MLA #KILLED