'எங்களுக்கு ஆர்டர் வந்துது'.. நெஞ்சைப் பிழியும் குரூரமான காரியம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 24, 2019 12:35 PM

தெலுங்கானாவின் சித்திப் பேட்டையில் கருணையின்றி ஒரே நாளில் சுமார் 70 நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.

70 street dogs killed in telangana, heart breaking video

இது தொடர்பாக, நெஞ்சைப் பிழியும் வகையிலான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு லாரி முழுவது கொன்று குவிக்கப்பட்ட நாய்களை பணியாளர்கள் 2 பேர் தூக்கி வீசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பெண் ஆர்வலரான ரூடி விதி, அழுதுகொண்டே, நாய்கள் கொல்லப்பட்டது பற்றி கேள்வி எழுப்புகிறார்.

அவர்களோ தங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும், அதனால் தாங்கள் இவ்வாறு செய்வதாகவும் பதில் அளிக்கிறார்கள். அதற்கு மீண்டும் இந்த பெண்மணி, அழுதுகொண்டே, இவ்வளவு நாய்களையும் கொல்லச் சொல்லி உத்தரவு வந்ததா உங்களுக்கு? இதில் சிறிய நாய்களும் உள்ளன என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தான் தினமும் உணவளிக்கும் 2 நாய்களும் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வருந்தியுள்ளார். அதன் பின் அங்கு விரைந்த மற்றொரு சமூக ஆர்வலர் ஒருவர், இந்த சம்பவத்தை புகைப்படமாக எடுத்து சித்திப் பேட்டை காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

விஷம் வைக்கப்பட்டு, ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்டு குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட இந்த தெருநாய்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளதோடு, இந்த நாய்களின் சடலங்களை லாரியில் கொண்டு சென்றவர்கள் நகராட்சி ஊழியர்களே இல்லை என்பதும் தெரியவந்ததை அடுத்து, இதற்கு பொறுப்பான நகராட்சி பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #VIDEOVIRA #DOGS #TELANGANA