'சீனாவை தனிமைப்படுத்த' தயாராகும் 'நாடுகள்'... 'பிள்ளையார் சுழி' போட்டது 'ஜப்பான்...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 11, 2020 06:56 PM

சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என முடிவெடித்துள்ள ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், சீனாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டுள்ளன.

Countries preparing to isolate China economically

கொரோனா பிரச்னையால் உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டி இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால் அந்த நிறுவனங்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீனா செய்த வேலைக்கு பதிலடி தர வேண்டும் என்று ஒரு சில நாடுகளிடையே கருத்து நிலவுகிறது.  சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாடுகள் நினைக்கின்றன. இனிமேல் சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்று அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்த வரிசையில் அமெரிக்காவும், ஜப்பானும் முன்னிலையில் உள்ளது. சீனாவை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஜப்பான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு நிவாரண நிதி தருவதற்காக, சுமார் 2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம் ஆகும். இதிலிருந்து உலகுக்கு ஜப்பான் தெரிவிக்கும் செய்தி சீனாவை விட்டு வெளியேறுங்கள் என்பது மட்டுமே.

சீனாவில் உற்பத்தி குறைந்தால் அதனால் பலனடையும் முக்கிய நாடு இந்தியா. ஏனென்றால் இந்தியாவில் உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் மனித சக்தி ஏராளமாக கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பெருகும். அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்பதால் உலக நாடுகளின் பார்வை அடுத்ததாக இந்த நாடுகளைத்தான் குறி வைக்கின்றன.