இந்தியாவில் 'லாக் டவுன்' இல்லையென்றால்... தற்போதைய 'நிலவரம்' என்னவாக இருந்திருக்கும்?... வெளியாகியுள்ள 'ஷாக்' ரிப்போர்ட்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 12, 2020 08:05 PM

ஊரடங்கை அமல்படுத்தாமல் போயிருந்தால் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வாக்கில் இந்தியாவில் சுமார் 8 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India Coronavirus Affected Count Statistics Without Lockdown

இதுதொடர்பான வரைபடத்தில் சிகப்பு, பச்சை, நீலம் என 3 வளைகோடுகள் காட்டப்பட்டுள்ளன. சிகப்பு வளைகோடானது லாக் டவுன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்  இரண்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிலவரம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்டுகிறது. இதில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கில் 2,08,544 கொரோனா பாதிப்புகள் இருந்திருக்கும் எனவும், அந்த எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி வாக்கில் 8.2 லட்சமாக அதிகரித்திருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள  நீல வளைகோட்டின்படி, ஏப்ரல் 11 வாக்கில் 45, 370 ஆக இருக்கும் எனக் காட்டப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு ஏப்ரல் 15ஆம் தேதி வாக்கில் 1.2 லட்சமாக அதிகரித்திருக்கும் எனக் காட்டப்பட்டுள்ளது. இந்த நீலக்கோடு லாக் டவுன் இன்றி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தால் இருந்திருக்கக் கூடிய நிலவரத்தைக் குறிக்கிறது. மேலும் கடைசி வளைகோடான பச்சை நிறமானது தற்போதைய நிலவரமான 7,447 கொரோனா பாதிப்பை காட்டுகிறது.