தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! || மேலும் ரூ.1000 நிவாரணம் இவர்களுக்கும் மட்டும் - தமிழக முதல்வர் அறிவிப்பு! || பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களுக்கு உரை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 13, 2020 06:56 PM

1. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Corona lockdown pm going to address the nation tomorrow

2. ஊரடங்கு நீட்டிப்பால் கட்டடத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

3. கொரோனாவை தடுக்கும் வகையில்  பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து பிரதமர் மோடி நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

4. தமிழகத்தில் ஒரு மாத மின்கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என மதிமுக கட்சியின் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குப் புதிய தலைவராக கா.பாலச்சந்திரன் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. ஜன்தன் கணக்குகளில் ரூபாய் 500 கொரோனா நிவாரண நிதி பணம் எடுப்பதற்காக வங்கியில் கூட்டம் அலைமோதியது.

7. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

8. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவி செய்ய தடை விதிப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உண்மைக்கு மாறாக பிரசாரம் செய்து வருவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

9. தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றோடு 1,173 ஆக அதிகரித்துள்ளது.

10. கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு தற்போது லண்டன் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.