'தொடர்ந்து இரண்டாவது முறையாக'... 'அபராதம் செலுத்தும் இந்திய அணி!'... 'ஐ.சி.சி அதிரடி'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Feb 03, 2020 06:50 PM

நியூசிலாந்துக்கு எதிரான 5வது 20 ஓவர் போட்டியில் நேர அனுமதி கடந்து பந்து வீசிய இந்திய அணிக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

icc fines indian team second time for slow overs against nz

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. மேலும், 5-0 என்ற புள்ளி கணக்கில் தொடரையும் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 5வது 20 ஓவர் போட்டியில் நேரஅனுமதி கடந்து பந்து வீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன் படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.

நியூசிலாந்துக்கான எதிரான 4வது 20 ஓவர் போட்டியிலும், நேரஅனுமதி கடந்து பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு 40% அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி நேரஅனுமதி விவகாரத்தில், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : #ICC #INDIA #NZ