‘கொரோனா’ வைரஸ் பரவும் ‘அபாயம்’ அதிகமுள்ள ‘30 நாடுகள்’... பட்டியலில் ‘இந்தியாவின்’ இடம்?...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 30, 2020 06:04 PM

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமுள்ள 30 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

India Among Top 30 Countries At High Risk From Coronavirus Spread

பிரிட்டனைச் சேர்ந்த சவுத்ஹாம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான பயணம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வு குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமுள்ள 30 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடங்களில் ஜப்பான், ஹாங்காங் ஆகியவையும் உள்ளன.

மேலும் அந்தப் பட்டியலில் அமெரிக்கா 6வது இடத்திலும், ஆஸ்திரேலியா 10வது இடத்திலும், பிரிட்டன் 17வது இடத்திலும், இந்தியா 23வது இடத்திலும் உள்ளன. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக் முதலிடத்திலும், ஹாங்காங், தைவானின் தைபே ஆகியவை அதற்கு அடுத்த இடங்களிலும் உள்ளன.

Tags : #CORONA #VIRUS #COUNTRY #INDIA #CHINA