‘இவரு சாதாரண ஆள் மாதிரி தெரியல’..வயிற்றில், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரு டிரைவர், 1 கத்தி!.. மிரண்டு போன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 25, 2019 05:56 PM

நோயாளி ஒருவரின் வயிற்றில் 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரு டிரைவர், 1 கத்தி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spoons, knife, screwdrivers, toothbrushes recovered from man\'s stomach

சில நாள்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வயிற்று வழியின் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதனால் இவரின் வயிற்றை பரிசோதித்து பார்க்க மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த நபரின் வயிற்றுக்குள் 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரு டிரைவர், 1 கத்தி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பொருள்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த மருத்துவர் நிகில்,‘பரிசோதனையில் அவரின் வயிற்றில் ஸ்பூன், கத்தி போன்ற பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக எங்கள் மருத்துவ குழு அவரின் வயிற்றில் இருந்த பொருள்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். சாதாரணமாக இருக்கும் மனிதர்கள் கத்தி, ஸ்பூன் போன்ற பொருள்களை விழுங்க மாட்டார்கள். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #BIZARRE #STOMACH #HIMACHALPRADESH