‘324 மீட்டர் உயரம், இளைஞர் செய்த விபரீத செயல்’ மூடப்பட்ட ஈபிள் டவர்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | May 21, 2019 12:06 AM
ஈபிள் டவரின் மீது இளைஞர் ஒருவர் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸின் முக்கிய சுற்றுலா தளங்களுள் ஒன்றான ஈபிள் டவரைக் காண நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். சுமார் 324 மீட்டர் உயரம் கொண்ட இந்த டவரில் இளைஞர் ஒருவர் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈபிள் டவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரசித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் வேகமாக ஈபிள் டவரின் மீது ஏறி சென்றுள்ளார். இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சுற்றுலா பயணிகளை அப்பகுதியில் இருந்து கலைந்து போக செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஈபிள் டவரின் மீது இருந்த இளைஞரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். உடனே அங்கிருந்து குதித்துவிடுவதாக அந்த இளைஞர் பயமுறுத்தி உள்ளார். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 324 மீட்டர் உயரமுள்ள டவரில் 149 மீட்டர் தொலைவு வரை அந்த இளைஞர் ஏறியதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பினால் ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது.