‘கைவரிசையை.. இல்ல.. இல்ல.. வாய்வரிசையைக் காட்டிய வளர்ப்பு நாய்’.. அப்படி என்ன செஞ்சுது? தரமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | May 03, 2019 04:08 PM

வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு நாய் ஒன்று, வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரூபாய் பணத்தை சாப்பிட்டே தீர்த்துள்ளது.

UK Dog eats 160 pound money, owner took him to hopsital bizarre

வளர்ப்பு நாய் என்றாலே செல்லமாக சேட்டைகளை செய்வது வழக்கம். அதன் அநாயச சேட்டைகளுக்கு, வளர்ப்பாளர் எந்த அளவுக்கு உத்வேகம் கொடுத்து ஊக்குவிக்கிறார்களோ அந்த அளவுக்கு அதன் தாண்டவம் ஜாஸ்தி ஆகிவிடும் என்பதை நாய்க்குட்டி வளர்ப்பாளர்கள் உணரக் கூடும்.

அப்படித்தான் இங்கிலாந்தின் வடக்கு வேர்ஸ் பகுதியில் ஜூடித் ரைட் என்பவர் தன் வீட்டில், தன் 9 வயது மகனின் பிரியத்துக்காக  லேப்ராடூடுல் வகை நாய் ஒன்றுக்கு ஓசி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.  ஆனால் இந்த நாய் வீட்டில் இருந்த கிட்டத்தட்ட 160 பவுண்ட் பணத்தை, அதாவது இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாயை தின்றே தீர்த்துள்ளது.

இது பற்றி பேசிய நாயின் உரிமையாளர் இதற்கு முன்பாக தமது வீட்டு நாய் இத்தகைய பணத்தையெல்லாம் பசியில் தின்றதில்லை என்றும் இம்முறைதான் இப்படி உண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே வளர்ப்பு நாய், வீட்டில் தனியாக இருந்தாலோ, கம்பெனிக்கு ஆள் இல்லை என்றாலோ, கையில்.. மன்னிக்கவும்.. வாயில் கிடைப்பதை கடித்துக் குதறிவிடும்.

அவ்வகையில் இந்த நாய் போஸ்ட் பாக்ஸ் கவரில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த 160 பவுண்ட் பணத்தை தின்றதால் அதிர்ச்சியான உரிமையாளர் நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 11 ஆயிரம் செலவு செய்துள்ளார்.

Tags : #DOGSLIFE #BIZARRE #ENGLAND