'நாய்க்குட்டிகளுக்கு வெக்குற பெயர்களா இதெல்லாம்'.. காண்டான போலீஸ்.. கைது செய்யப்பட்ட நபர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 16, 2019 06:18 PM

சீனாவின் அன்ஹூர் என்கிற மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நாய்களுக்கு வைத்துள்ள பெயர்களுக்காகவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

china man arrested for naming these kind of names for his dogs

சீனாவில் வாலிபவர் ஒருவர், தனது வளர்ப்பு நாய்களுக்கு Chengguan, Xieguan ஆகிய பெயர்களை வைத்திருப்பதாலேயே அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாய்களுக்கு இந்த பெயர்களை வைத்ததற்கு எப்படி ஒருவரை கைது செய்ய முடியும் என்றால், அங்குதான் விஷயமே இருக்கிறது.

ஆம், மேற்கண்ட இரண்டு பெயர்களில் Chengguan என்பது அந்நாட்டில் நடக்கும் சிறிய குற்றங்களை கண்காணிக்கும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளைக் குறிப்பதாலும், Xieguan என்பது டிராஃபிக் அதிகாரிகள் உள்ளிட்டவர்களைக் குறிக்கும் பெயர் என்பதாலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

WeChatல் இந்த தகவலை அந்த நபரே ஷேர் செய்ததால், காவல்துறையினரின் பார்வைக்குச் சென்றடைந்துள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளை இழிவுபடுத்தியதாக அந்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு 10 நாள்கள் சிறைவைக்கப்பட்டார். இதுபற்றி பேசிய பேன் என்கிற அந்த நபர் தனக்கு இதெல்லாம் சட்டப்படி தவறு என்று தனக்கு தெரியாது என்றும் தான், ஜாலியாகவே இதனைச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி கருத்து கூறியுள்ள பலரும், நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார் என்றும், சிலர் இதெல்லாம் தவறு என்று சட்டத்தில் எங்கே இருக்கிறது என்றும் கேட்டுள்ளனர்.

Tags : #CHINA #VIRAL #DOG #ARREST #BIZARRE