'இப்படி ஃபோட்டோ போட்டு என்ன பயப்படுத்தாதீங்க..' இந்திய வீரர்களைப் பார்த்து பயப்படும் முன்னாள் வீரர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 25, 2019 04:19 PM

ஒரு காலத்தில் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷிங் பாட்னர்களாக இருந்தவர்கள் யுவராஜ் சிங், மொகமது கைஃப் ஜோடி.

nasser hussains funniest response to kaif and yuvrajs selfie at lords

சமீபத்தில் லாட்ர்ஸ் மைதானம் சென்ற போது அவர்கள் எடுத்த புகைப்படத்தை கைஃப் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து லார்ட்ஸில். உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். விராட் கோலி மற்றும் வீரர்கள் ஜூலை 14-ஆம் தேதி இங்கு கோப்பையை வெல்வார்கள் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

17 ஆண்டுகளுக்கு முன் லார்ட்ஸில்  கைஃப் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் சேர்ந்து 324 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டி இந்திய அணியை வெற்றி பெறச் செய்து அசத்தினர். அப்போது இங்கிலாந்து கேப்டனாக இருந்தவர் நாசர் ஹுசைன். அந்தப் போட்டியில் தோற்றதை இன்னும் மறக்காத நாசர் இந்தப் பதிவிற்கு நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், “இந்தப் புகைப்படத்தின் முன் கண் விழிக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இன்றும் இவர்கள் இருவரைப் பற்றி எனக்கு பயங்கரமான கனவுகள் வருகிறது.” என அவர்களைப் புகழுமாறு பதிவிட்டுள்ளார்.

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #YUVRAJSINGH #MOHAMMEDKAIF #SELFIE