'ஷோ ரூம் வாசலிலேயே' வைத்து புதிய செல்போனுக்கு தீ வைத்துக் கொளுத்திய நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 10, 2019 02:27 PM

புதிதாக வாங்கிய செல்போன் சரியாக வேலை செய்யவில்லை என்று சென்னையில் உள்ள பிரபலமான செல்போன் விற்பனை ஷோ ரூம் வாசலிலேயே வைத்துவ் வாடிக்கையாளர் ஒருவர் அந்த செல்போனை தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man sets fire on a new cellphone in front of show room

நாடு முழுவதும் தனது செல்போன் விற்பனையகக் கிளையை வைத்திருக்கும் பிரபல செல்போன் டீலர் நிறுவனத்தின்  குரோம்பேட்டை ஷோ ரூமில் தலைமலை என்னும் வாடிக்கையாளர் ஒருவர் காஸ்ட்லியான ஒரு செல்போனை வாங்கியுள்ளார்.
ஆனால் புதிதாக வாங்கிய அந்த செல்போன் சரியாக வேலை செய்யாததால் கடும் அதிருப்தியாகியுள்ள தலைமலை, அதுகுறித்து அந்த ஷூ ரூமின் மேலாளரிடம் கேட்டு தெளிய வேண்டும் என்று முடிவுச் செய்துள்ளார். அதற்கென அவரிடம் சென்று இந்த சிக்கல் குறித்து விவாதித்துள்ளார்.

ஆனால் அதற்கு அந்த ஷோ ரூம் மேலாளர் கூறிய பதிலால் அதிருப்தி அடைந்ததாகவும் ஏற்கனவே புதிதாக வாங்கிய செல்போன் சரியாக வேலை செய்யாததால் விரக்தியில் இருப்பதாலும், தலைமலைக்கு கோபம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த ஷோ ரூமின் வாசல் முன்னால் வைத்தே, தான் புதிதாக வாங்கிய அந்த செல்போனை தலைமலை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

Tags : #SMARTPHONE #CELLPHONE #BIZARRE #CUSTOMER #SHOWROOM