விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு போன பிரபலங்கள்! .. அடுத்த ‘சில மணி நேரத்திலேயே’ விளக்கம் அளித்து வெளியுறவுத்துறை ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா பதிவிட்ட ட்வீட் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ், நடிகை மியா காலிஃபா உள்ளிட்ட பல பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இதனிடையே ரிஹானாவுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் பதிவிட்ட கங்கனா ரணாவத் போராடிக் கொண்டிருப்பார்கள் விவசாயிகள் அல்ல தீவிரவாதிகள் இந்தியாவை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ரிஹானாவின் ட்வீட்டுக்கு பின்னர் சர்வதேச பிரபலங்களின் கவனம் விவசாயிகள் போராட்டம் பக்கம் திரும்பியது. இதனை அடுத்து இந்த ட்வீட்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விரிவான அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் அனைத்து சட்டங்களும் நாடாளுமன்ற அவையில் முறையான விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டதாகவும் மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இவற்றை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
விவசாயிகளின் உணர்வுகளை மனதில் கொண்டு அவர்களுடன் அரசு தொடர்ந்து உரையாடி வருவதாகவும், இதுவரை போராட்டம் நடத்தக் கூடிய விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததாகவும், வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு அரசு தயாராக இருப்பதாக கூட அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரதமர் கூட இவற்றை வலியுறுத்தி வருவதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சிலர் தவறான உள் நோக்கத்துடன் இந்த போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்துவதைதாகவும்,போராட்டக் காரர்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த வன்முறை கூட இந்த காரணத்திற்காக தான் நடந்தது, எனவே இப்படியான போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக பண்பாகவே உலகம் பார்க்க வேண்டும், அரசும் விவசாயிகளும் நிச்சயம் ஜனநாயக முறையில் இதற்கு தீர்வை எட்டுவார்கள், இந்த பிரச்சினைகள் குறித்து சரியாகப் புரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறோம் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
#IndiaTogether #IndiaAgainstPropaganda https://t.co/TfdgXfrmNt pic.twitter.com/gRmIaL5Guw
— Anurag Srivastava (@MEAIndia) February 3, 2021
அத்துடன் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சில பிரபலங்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் எதுவும் சரியானவை அல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் பதிவுகள் வெளியானதுமே வெளியுறவுத்துறை அமைச்சகம் இப்படி பதில் அளிப்பது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.