'திடீர்னு ஆஃப் ஆன கரெண்ட் கனெக்சன்...' 'வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் நோட் பண்ணி...' 'காலையில வீட்ட தொறந்து பார்த்தப்போ...' - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி மாவட்டத்தில் விடுதி விடுதி காப்பாளர் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Dharmapuri 12 pound gold jewelery and Rs 8,000 hostel Dharmapuri 12 pound gold jewelery and Rs 8,000 hostel](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/dharmapuri-12-pound-gold-jewelery-and-rs-8000-hostel.jpg)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான ரதி. இவரது கணவர் சோமுவேல் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டா நிலையில் இவர் மாங்கரை அரசினர் மாணவியர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார்.
தனது 2 மகன்கள் மற்றும் பாட்டியுடன் சொந்த வீட்டில் வசித்து வரும் ரதி, கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் கீழ் வீட்டை பூட்டிவிட்டு மேல் வீட்டில் உறங்கி வந்துள்ளனர். இவர்களது வீட்டை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர் வியாழன் இரவு வீட்டின் மின் இணைப்பை துண்டித்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 8000 ரொக்கத்தை எடுத்து சென்றுள்ளான்.
கொள்ளை சம்பவம் குறித்த அறியாத ரதி எப்போதும் போல் காலையில் கீழே வீட்டிற்கு வந்த போது அதிர்ச்சியடைந்துள்ளார். பின் உடனடியாக ஒகேனக்கல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் இருக்கும் போது எந்தவித அச்சமும் இன்றி நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)