அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிலேயே... ஆன்லைன் கொள்ளையர்கள் கைவரிசை!.. டெல்லியில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தளமான OLX-ல் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனை பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் QR code லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
PC: ANI
மோசடி நபரின் செயல் குறித்து டெல்லி சிவில் லைன் காவல்நிலையத்தில் ஹர்ஷிதா புகார் அளித்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி முதல்வரின் மகளிடமே ஆன்லைனில் மோசடி நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவனமும் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
