'கத்தையா இருக்கும்னு வந்தா...' 'சில்லறையா இருக்கு...' 'இது சரி வராது...' 'ப்ளானை மாற்றிய திருடர்கள்...' - காலையில் காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டாஸ்மாக் கடையை உடைத்து 60,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

வாலாஜாபாத், பச்சையம்மன் கோயில் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் (10-02-2021) இரவு ஊழியர்கள், சுமார் 11 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று (11-02-2021) காலையில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கண்டுள்ளனர். உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கடைக்குள் 6,500-க்கு சில்லறை காசுகளாக இருந்தன. இதனால் கடும் விரக்தியடைந்துள்ளனர், இதனால் திட்டத்தை மாற்றினர். சில்லறை காசுகளை எடுத்து கொண்டு, கடையில் இருந்த 60 ஆயிரம் மதிப்பில் விலை அதிகமுள்ள முழு மதுபாட்டில்கள் கொண்ட 10 அட்டை பெட்டிகளை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அதை ஏன் பொருத்தவில்லை என ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
