காட்டுக்குள்ள நடந்துபோனப்போ பாறைக்கு இடையே சிக்கிய இளைஞர்.. 3 நாள் ஜூஸ் தான் சாப்பாடே... திக் திக் நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய இடத்தில் சிக்கித் தவித்த ஒருவர் 24 மணிநேரங்கள் நீடித்த மீட்பு முயற்சியின் பலனாக காற்றப்பட்டிருக்கிறார்.
Also Read | "நீ சச்சின் மகன்-ங்குறத மறந்துடு".. அர்ஜுன் டெண்டுல்கரின் கோச் போட்ட அதிரடி கண்டிஷன்.. ஆத்தாடி அவரா இது..?
ரெட்டிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சி.ராஜு என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை, தனது நண்பருடன் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அவருடைய செல்போன், பாறைகளுக்கு நடுவே விழுந்திருக்கிறது. அதனை எடுக்க முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக ராஜு அந்த பாறைகளுக்கு இடையே விழுந்திருக்கிறார். குறுகலாக இருந்த அந்த இடத்தில் இருந்து அவரால் வெளியே வர இயலவில்லை.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்க முயன்றும் பலனின்றி போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கொடுத்தனர். தகவலறிந்து புதன்கிழமை மாலை 4 மணியளவில் மற்ற துறைகளின் அதிகாரிகளுடன் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப்பணியில் வனத்துறை, மருத்துவ பணியாளர்கள் குழு, தீயணைப்பு குழு மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களின் துணையுடன் இளைஞரை சூழ்ந்திருந்த பாறைகளை அகற்ற அதிகாரிகள் முயன்றனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
உடைந்த பாறைகள் அவர் மீது விழாமல் இருப்பதை உறுதி செய்த பிறகு கட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதிகாரிகள் ராஜுவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மீட்பு பணியின்போது வழங்கி வந்திருக்கின்றனர். ராஜுவின் உறவினரான அசோக், பாறைகளுக்குள் அவருக்கு அருகில் சென்று அவருக்குத் தைரியம் அளிக்கும் வகையில் பேசியும் சீரான இடைவெளியில் அவருக்கு உணவு வழங்கியும் மீட்புப் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
கமாரெட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி இதுபற்றி பேசுகையில், "அவர் சிக்கியிருந்த கற்பாறைகளை அகற்ற வேண்டியிருந்தது. சுமார் 10 கற்பாறைகள் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றப்பட்டன. இறுதியில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். நாங்கள் அப்போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்" என்றார்..
வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த ராஜு மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.