'ஸ்டீவ் ஜாப்ஸா'?...இல்ல 'ஸ்டீவ் நோ ஜாப்ஸா'?... 'வைரலாகும் போட்டோ'... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 28, 2019 12:48 PM

தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம்  ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்கை உதாரணமாக

Steve Jobs look alike photo boots up new Apple conspiracy

இருக்கும் என பலரும் கூறுவது உண்டு.

தொழில்நுட்ப சாதனங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் தந்தை என்றே  ஸ்டீவ் ஜாப்ஸை கூறலாம். சிறந்த நிர்வாகி மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கு அடித்தளமாய் அமைந்த அவர், தனது 56வது வயதில் கடந்த 2011ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு புகைப்படம், மீண்டும் அவர் குறித்த விவாதத்திற்கு தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது.

எகிப்தில் எடுக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே இருந்தது. உடனடியாக அதனை பகிர்ந்த பலரும் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என பதிவிட்டனர். அதற்கு சில ஆதாரங்களையும் அவர்கள் கூறினர். ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் அணியவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என நகைச்சுவையாக தெரிவித்தனர். இதற்கிடையே இன்னும் சிலர் அவர் ஸ்டீவ் ஜாப்ஸா அல்லது ஸ்டீவ் நோ ஜாப்ஸா எனவும் நக்கலாக கிண்டலடித்து வருகிறார்கள்.

Tags : #APPLE #JOBS #STEVE JOBS