மக்கள்தொகை பெருக்கம்... 'உலக' நாடுகளை பின்னுக்குத்தள்ளி... முதலிடம் பிடித்த 'தென்னக' நகரங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 10, 2020 12:11 AM
உலகில் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில், கேரள மாநிலத்தின் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 4-வது இடத்தை கோழிக்கோடும், 10-வது இடத்தை கொல்லமும் பிடித்துள்ளது. ஐ.நா. சபையின் தி எகனாமிஸ்ட் மேகஸின் (The Economist magazine) இதழ் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. தமிழத்தில் இருந்து திருப்பூர் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பின்னலாடை நகரம் என புகழப்படும் திருப்பூருக்கு இந்த பட்டியலில் 30-வது இடம் கிடைத்துள்ளது.
வியட்நாமின் கேன் தோ நகரம் இரண்டாவது இடத்தையும், சீனாவின் சுக்லோன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நைஜீரியானவின் அபுஜா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் சுஸ்குவா 6-வது இடத்தையும் அமீரகத்தின் ஷார்ஜா 7-வது இடத்தையும் சீனாவின் புட்லான் 8- வது இடத்தையும், ஓமன் தலைநகர் மஸ்கட் 9-வது இடத்தையும் பெற்றுள்ளன. 2015-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மலப்புரத்தில் மக்கள்தொகை சுமார் 44% வளர்ச்சி அடைந்துள்ளது.
இதேபோல கேரள மாநிலத்தின் மற்றொரு நகரமான திருச்சூர் இந்த பட்டியலில் 13-வது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 17 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர். இந்த நகரத்தில் இருந்து வளைகுடா நாடுகளில் ஏராளமானோர் வேலை செய்வதால் மலப்புரம் முழுவதுமே செல்வச்செழிப்பில் இந்த நகரம் திளைத்து வருகிறது.