“காரை மறித்து சரமாரி தாக்குதல்!”.. “முத்தூட் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநருக்கு” நேர்ந்த பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 08, 2020 05:31 PM

கேரள மாநிலத்தின் கொச்சியை தலைநகராகக் கொண்டு இயங்கி வருகிறது  முத்தூட் பைனான்ஸ்.

muthoot finance MD george alexander assaulted in Keralas Kochi

பிரபலமான இந்த நகை அடமான நிறுவனம் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக தன்னுடைய 43 கிளைகளை மூடுவதாகவும், இதனால் 163 பேருக்கு பணி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்ததாக கூறப்ப்டும் நிலையில், இந்த நடவடிக்கையால் அதிருப்தியான பணியாளர்கள், நிறுவனத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு மாணவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள முத்து பைனான்ஸ் தலைமை அலுவலகத்துக்கு காரில் செல்ல முயன்ற நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்சாண்டரை, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதாலும் இதனால் பலத்த காயமடைந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாலும் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தாக்கப்பட்ட முத்துட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #KERALA #MUTHOOTFINANCE