‘ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி’... ‘அறுவை சிகிச்சைக்குப் பின்பும் நிதி உதவி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 03, 2019 10:17 PM
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கும், நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரா முதல்வராக பதவியேற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த திட்டங்கள் எல்லாம், அந்த மாநில மக்களை மட்டுமின்றி, அனைத்து மாநில மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ஒ.எஸ்.ஆர். ஆரோக்கியஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டத்தின் கீழ், புதிய திட்டம் ஒன்றை ஜெகன் மோகன் ரெட்டி விரிவுப்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளார்.
மருத்துவரின் பரிந்துரைப்படி அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு, நாளொன்றுக்கு 225 ரூபாய் வீதம் அல்லது மாதத்திற்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்குள், அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் விதமாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 26 சிறப்பு பிரிவுகளில், 836 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்ட 10 நோயாளிகளை சந்தித்து பேசிய ஜெகன், கடந்த 25-ம் தேதி, சத்ய லீலா என்ற பெண்மணிக்கு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டதை அடுத்து அவருக்கு 60 நாட்களுக்கான நிதியுதவியை வழங்கினார். மேலும் ஆரோக்கியஸ்ரீ ஆசாரா திட்டமானது, ஆண்டு வருமானம் 5,000 ஆயிரத்திற்கும் குறைவானர்களுக்கு, மருத்து செலவுக்காக அறிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரும் ஜனவரி மாதம் முதல், டெங்கு உள்ளிட்ட 2,000 வகையான நோய்களுக்கான மருத்து செலவுகளும் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
