'1.73 லட்சம் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு’... ‘காத்திருந்த இன்ப அதிர்ச்சி’... 'திரும்பி பார்க்க வைத்த ஜெகன்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Oct 05, 2019 11:37 PM
ஆட்டோ, கார் போன்ற சுயதொழில் செய்து வரும் ஓட்டுநர்களை ஊக்குவிப்பதற்காக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடியை மேற்கொண்டுள்ளார்.

ஆந்திராவில் கடந்த மே மாதம் பதவியேற்றது முதல், ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கு முன்னதாக பாதயாத்திரை மேற்கொண்ட ஜெகன் மோகனிடம், தாங்கள் சொந்தமாக ஆட்டோ, கார் மற்றும் மேக்சி கேப் போன்றவை வைத்து, சவாரி செய்து வந்தாலும், தினமும் கிடைக்கும் 200 முதல் 500 ரூபாய் கொண்டு, குடும்பத்தை கவனிக்காத முடியாதநிலையில் இருப்பதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். அப்போது ஜெகன் மோகன் வாக்குறுதியளித்திருந்தார்.
தேர்தலில் வெற்றிப் பெற்றதையடுத்து, கோதாவரி மாவட்டம் எல்லூரில், ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற திட்டத்தை துவங்கி வைத்தார் ஜெகன். அதன்படி, சொந்தமாக ஆட்டோ வாங்கி சவாரிக்கு ஓட்டுவோரின், வாகன பராமரிப்பு, காப்பீடு கட்டணங்கள், சாலை வரி உள்ளிட்ட செலவுகளுக்காக, ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜெகன்மோகன் கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார்.
சுமார் 1,75,352 பேர் இந்த திட்டத்துக்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 1,73,102 பேருக்கு உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. மேலும் இந்த திட்டம் இந்த மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வரும் 5 வருடங்களில், ஆண்டுதோறும் 50,000 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
