‘இது வேலை இல்ல சேவை’.. ‘ஒரே நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு வேலை’.. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 01, 2019 11:22 AM

ஆந்திராவில் 1.26 லட்சம் பேரை புதிதாக அரசு வேலைகளில் பணியமர்த்தி அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசத்தியுள்ளார்.

Andhra govt appoints 1.26 lakh employees in one recruitment drive

ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அனைவரும் ஆச்சரியப்பட வைத்து வருபவர் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அந்த வகையில் ஒரே நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு அரசு வேலையை வழங்கி அசத்தியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, கிராமங்களில் கிராம் செயலகத்தையும், நகர்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது. இந்த செயலங்கள் 500 வகையான பொது சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்காக சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 19.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு எழுதியவர்களில் 1.98 லட்சம் பேர் அரசு வேலைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் தேர்வானவர்களில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார். ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கியது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதில் பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், சுகாதாரம், விவசாயம், பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இவர்கள் சேவையாற்ற உள்ளனர்.

விழாவில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ‘புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்கள் லஞ்சம் இல்லாத சேவையை வழங்க உறுதி அளிக்க வேண்டும். இதை வேலையாக நினைக்காமல் சேவையாக செய்ய வேண்டும். இதுபோல் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #JAGANMOHANREDDY #EMPLOYEES #RECRUITMENT #YSJAGAN #ANDHRAPRADESH #ANDHRAPRADESHCHIEFMINISTER #GOVERNMENTJOB