'ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அசத்தல்'... ‘ஆண்களுக்கு நிகராக’... ‘பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Oct 04, 2019 02:28 PM

விவசாயத் துறையில் ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கும் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

50% quota for women in market panel chief posts in andhra

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த மே மாதம் பதவியேற்றது முதல், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, செயல்படுத்தியும் வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான், சுமார் லட்சகணக்கான இளைஞர்களுக்கு, ஒரே நாளில் அரசு வேலைக்கான பணி நியமனை ஆணை வழங்குதல், மது விலக்கை படிப்படியாக நிறைவேற்றுதல் உள்ளிட்ட அதிரடிகளை மேற்கொண்டார். இந்நிலையில், மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் விவசாயப் பொருட்களை சந்தைப் படுத்துதல் (மார்கெட்டிங்) ஆகிய துறைக்களுக்கான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.

அதில், விவசாயத் துறையில் சந்தை குழுத் தலைவர்களை நியமிப்பதில், (Marketing committee Chairpersons) பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் இந்தத் துறைகளில் உள்ள குழுக்களில், ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பதவி வகிப்பார்கள் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இவர்கள் விவசாயப் பொருட்களின் விலைகளை நிர்ணயித்தல் உள்ளிட்டவற்றை கவனிப்பார்கள்.

இதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, தற்போது முதல் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள், தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு, பணிநியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #JAGANMOHANREDDY #ANDHRAPRADESH