'கொதிக்கும் சூடான சாம்பார் பாத்திரம்'.. விழுந்து துடித்த யுகேஜி குழந்தைக்கு நொடியில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 15, 2019 01:08 PM

ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் UKG வகுப்பு மாணவன் சாம்பார் அண்டாவுக்குள் தவறுதலாக விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

6 yrs old UKG boy falls in Sambar vessel and lost his life

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி பயின்று வந்த 6 வயது UKG வகுப்பு மாணவன் மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளான். 

அப்போது சிறுவன் வரிசையில் நில்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்து விளையாண்டுக்கொண்டிருந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்கு சூடாக கொதிக்க கொதிக்க சாம்பார் அண்டாவை சமையலர்கள் கொண்டுவந்து வைத்துள்ளனர். 

விளையாட்டு பிள்ளைப் பருவத்தில் இருந்த சிறுவன் தெரியாமல் ஓடும்போது கொதிக்க கொதிக்க இருந்த சூடான பெரிய சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்து துடிதுடித்து அலறியுள்ளான்.  இதனையடுத்து சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த கர்னூல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். 

ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Tags : #ANDHRAPRADESH #MINORBOY #SAMBARVESSLE