கதவை 'உடைத்துக்கொண்டு' புகுந்த ஆம்புலன்ஸ்... 23 வயது இளம் 'செவிலியருக்கு' நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ஆம்புலன்ஸ் மோதி 23 வயது இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த அந்திக்காட் என்னும் இடத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் டோனா வர்கீஸ்(23). 2 வாரங்களுக்கு முன் டோனாவுக்கு ஆம்புலன்ஸ் பணியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. வீட்டில் யாரோ மயக்கமடைந்ததை பற்றி தெரிவிக்க உடனே டோனாவுடன் அஜய்குமார் என்பவரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் 1 கி.மீ செல்வதற்கு உள்ளேயே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த வீட்டிற்குள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.
இதில் அந்த வீட்டினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் டோனாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
