'காருக்குள் இருந்தபடியே சோதனை...' 'கேரள அரசின் புதிய கண்டுபிடிப்பு...' 'கொரோனா' பணியில் 'புரட்சி' செய்யும் 'திரங்கா வாகனம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 22, 2020 07:42 PM

கொரோனா வைரசை ஒழிப்பதற்காக கேரளா அரசு பயன்படுத்தும் திரங்கா வாகனம், மருத்தவ ஊரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாக அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tiranga vehicle used by the Kerala to eradicate coronavirus

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் நாடு முழுவதும், ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் கேரள மாநிலம் முதன்மையாக திகழ்கிறது.

கொரோனாவை நாட்டில்முதன் முதலாக கண்டுபிடித்த மாநிலம் கேரளா. அதே போல் அவற்றை கட்டுப்படுத்துவதிலும் முதலாவதாக உள்ளது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த திரங்கா வாகனத்தை பயன்படுத்தி வருகிறது.

இதற்காக இன்னோவா காரை மாற்றி அமைத்துள்ளது அம்மாநில சுகாதாரத்துறை. இது சுருக்கமாக ஆர்.எஸ்.வி (ரேபிட் ஸ்கிரீன வெகிகிள்) என அழைக்கப்படுகிறது. சோதனை முயற்சியாக கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இந்த வாகனம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த காரில் 3 சுகாதாரப்பணியாளர்கள் பயணம் செய்கின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்த காரில் செல்லும் சுகாதாரப்பணியாளர்கள், காரினுள்ளேயே இருந்தபடி சோதனைகளை மேற்கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதற்கு இருவழி மைக்ரோ போனை பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து மக்களிடம் காய்ச்சல் அறிகுறி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்து கொள்கிறார்கள்.

மேலும் திரங்கா காரில் இன்ஃபரா ரெட் தெர்மோமீட்டர் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காருக்குவெளியே நிற்பவரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க முடிகிறது. உடல் வெப்பநிலை நிலை அதிகரித்து காணப்பட்டாலோ, சேகரிக்கப்படும் விவரங்களில் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தாலோ, அவர்கள் குறித்த விவரங்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திடம் வழங்கப்படும். அதன்பின்னர் குறிப்பிட்ட நபரை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் பின் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.

சுகாதார அமைப்பினர் காரை விட்டு வெளியே வராமலேயே சோதனைகள் முடிக்கப்படுகிறது. அதே போல் காருக்குள் இருப்பவர்களை வெளியே இருப்பவர்களால் பார்க்க முடியாது.இதன் மூலம் கிருமி தொற்று சுகாதாரத்துறை ஊழியர்களை தொற்றுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும், குறிப்பிட்ட நாளில் பலருக்கு இதன் மூலம் சோதனைகளை நடத்தி விட முடிகிறது.

இந்த திரங்கா வாகனங்களைத் தொடர்ந்து அடுத்த கட்டநடவடிக்கையாக ஆர்.எஸ்.வி-2 வாகனத்தை அறிமுகம் செய்ய கேரள அரசு சார்பில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.