'விபத்தில்' சிக்கிய இளைஞரால்... 'இரண்டு' நாட்களுக்கு பின் காத்திருந்த 'அதிர்ச்சி'... போலீசாரின் நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 02, 2020 09:43 PM

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டை அருகே பைக்கில் வந்த போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

Young guy who meets accident tests positive for Corona

அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அந்த இளைஞருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு இருமல், சளி அறிகுறி இருந்துள்ளது.

அந்த இளைஞருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அந்த இளைஞரை விபத்தில் இருந்து மீட்ட போலீஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆந்த காவல அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.