'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 25, 2020 05:30 PM

தொடர்ந்து 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்த பெண், தற்போது பூரணமாக குணமடைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Kerala Woman, Who Tested Positive for Coronavirus 19 Times, Recovers

இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் 23 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசுக்கு இதுவரை 724 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும் தன்னலமற்று பணியாற்றி வரும் மருத்துவர்களின் சேவை காரணமாக,  வைரஸ் பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 4 ஆயிரத்து 813 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே கேரளாவில் 48 நாட்களில் 20 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண்ணுக்கு, கடந்த இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் என்ற பெண், கொரோனா பாதிப்பினால் கடந்த மார்ச் 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஷெர்லியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர்.

இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் சிகிச்சையின் படி 15 முதல் 20 நாட்களில் வைரசில் இருந்து முழுமையாக குணமடைவது வழக்கம். ஷெர்லியின் விவகாரம் சற்று வேற மாதிரியானது. அவர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 20 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எல்லாம் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்தது. அதாவது 20 முறை நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவு வந்தது.

இது மருத்துவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மற்றும் செய்யப்பட்டது. இதையடுத்து, 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்த ஷெர்லி அப்ரகாமிற்கு கடந்த இரண்டு முறை (21, 22-வது முறைகள்) நடத்தபட்ட பரிசோதனை முடிவுகள் கொரோனா நெகட்டிவ் என வர மருத்துவர்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே கடந்த நேற்று நடத்தப்பட்ட 22-வது பரிசோதனையிலும் ஷெர்லிக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லியை கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

20 முறை கொரோனா பாசிட்டிவ் என வந்த பெண் 48 நாட்கள், கேரள மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் இந்திய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.