'ஊரடங்கிலும் உடல்தானம்...' 'வாழ்ந்தப்போ தேடித்தேடி உதவி செய்வார்...' 'மார்க்கம் அனுமதிக்கல, ஆனாலும்...' நெகிழ வைத்த முஸ்லீம் குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் மூளை சாவு அடைந்த இஸ்லாமியர் தனது மார்க்கத்தை மீறி உடலுறுப்பு தானத்தின் மூலம் 6 மனிதர்களுக்கு மறுவாழ்வு அளித்த சம்பவம் அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளது.
கேரளத்தில் அப்துல் மஜீத் என்னும் 56 வயது முதியவர் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். அப்துல் சிஐடியு அமைப்பின் மாவட்டச் செயலாளர், மாநில மீனவர் நலவாரிய இயக்குநர் எனப் பல்வேறு அமைப்புகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றித் தவிக்கும் மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கேரள மாநில மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டியைச் சந்தித்து மனு அளித்தார் மஜித்.
மனு அளித்தது விட்டு வீடு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அப்துல் மஜீத்துக்கு மூளைச்சாவு அடைந்தார்.
அப்துலின் நிலை குறித்து உறவினர்களிடம் விளக்கிய திருவனந்தபுரம் அரசு மருத்துவர்கள், அப்துலின் உடலை தானம் செய்தால் சாவின் விளிம்பில் இருக்கும் 6 பேரை காப்பாற்ற முடியும் என கூறியுள்ளனர். அப்துலின் மனதை உணர்ந்த அவரின் உறவினர்கள் மார்க்கம் அனுமதிக்காத நிலையிலும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு மஜீத்தின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதித்தனர்.
இதன் மூலம் அப்துல் மஜீதின் சிறுநீரகம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், கல்லீரல் கொச்சி லேக் ஷெயர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கும், இரண்டு இதய வால்வுகள் திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெறும் இருவருக்கும், இரண்டு கண்கள் கார்னியா திருவனந்தபுரம் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கும் வழங்கப்பட்டது.
தங்களுடைய இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காவிட்டாலும், எப்பொழுதும் மக்களுக்கு உதவும் கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் அப்துல் மஜீத் உடலை தானம் செய்து 6 உயிர்களை காப்பாற்றிய அப்துலின் குடும்பத்தை அனைவரும் பாராட்டியும் நன்றி குறியும் வருகின்றனர்.