இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 23, 2020 12:28 PM

1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,700 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணக்கை 686 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,325 ஆகவும் உயர்ந்துள்ளது.

Tamil News Important Headlines Read Here For More April 23

2. தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது.

3. தமிழகத்தில் இதுவரை 752 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4. சென்னையில் அமைந்துள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

5. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021ஆம் ஆண்டு ஜூலை வரை வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

6. இந்தியாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற நீண்ட காலம் ஆகலாம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

7. அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 8,48,735 ஆக உயர்ந்துள்ளது.

8. கொரோனா பாதிப்பில் முன்னதாக நாட்டிலேயே 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 5வது இடத்தில் உள்ளது.

9. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வரும் 27ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10. இத்தாலியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

11. ரேபிட் டெஸ்ட் என்பது கொரோனாவை கண்கணிப்பதற்கான கருவி மட்டுமே என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

12. தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு 104 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

13. கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு ஆஸ்திரேலியா அரசு அழைப்பு விடுத்துள்ளது.