VIDEO நடுரோட்ல 'கைகலப்பு'.. சத்தியமா இப்படியொரு 'டுவிஸ்ட்ட' எதிர்பாக்கல!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Nov 18, 2019 09:09 PM
நடுரோட்டில் திடீரென இரண்டு பேர் பயங்கர சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் இரண்டு பேர் பயங்கரமாக அடித்து கொள்கின்றனர். ஆனால் யாரும் அவர்களை விலக்கி விடுவது போல தெரியவில்லை. ஒருவர் மற்றவரை பயங்கரமாக தாக்குகின்றனர். சுற்றிலும் கார்கள் நிற்கின்றன. எனினும் யாரும் அவர்களுக்கு உதவி செய்வது போல இல்லை. இந்தநிலையில் பயங்கரமாக சண்டை போட்ட இருவரும் கடைசியில் சண்டையை கைவிட்டு காரில் ஏறுகின்றனர்.
— Alisha 🧀✌🌊🤘🌊 (@Cptnrwrpnts) November 18, 2019
அந்த இடத்தில் தான் செம டுவிஸ்ட். இருவரும் ஒரே காரில் தனித்தனியாக ஏறுகின்றனர். யாரோ இருவர் சண்டையிட்டு கொள்கின்றனர் என்று நினைத்தால், இருவரும் ஒரே காரை விட்டு இறங்கி சண்டை போட்டுள்ளனர். என்ன காரணமாக இருக்கும்?என நெட்டிசன்கள் தலையை பிய்த்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
வீடியோ பார்த்து அவங்க சண்டைக்கு என்ன காரணமா இருக்கும்னு நீங்க சொல்லுங்க?
